The Tamil department wants to encourage students to express their philosophies, passions, and originality through a novel visual and scripture arts. The primary objective of the DSASC Thulir Tamil Mandram is to motivate students to take part in various artistic and imaginative pursuits. On 22.09.2021, the Tamil department established the Thulir Tamil Mandram to inspire students to use varied pictorial language skills.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
-என்றார் பாரதியார்.
“தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”
-என்று தமிழின் சிறப்பை உணர்த்தியவர் பாரதிதாசன்.
தான் இறக்கும் முன் தன்னுடைய கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்”
-என்று எழுத சொன்னவா் ஜி.யு.போப்.
இத்தகைய சிறப்புமிக்க மொழி நம் தமிழ்மொழி. திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த இம்மொழி, உலகம் முழுவதும் சிறந்த மொழியாக விளங்குகிறது. தலைமை மொழியாகவும் விளங்குகிறது. காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது நம் தமிழ் மொழியே. இம்மொழியானது 3500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினைக் கொண்டவை. அத்தகைய சிறப்பு மிக்க மொழியாக விளங்கக்கூடியது நம் தமிழ்மொழியின் சிறப்பினை அறியும் வண்ணமாக மாணவா்களின் பல்திறனையும், தமிழ்த்திறனை கண்டறிந்து அவா்களின் திறனை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் நோக்கமாக நம் கல்லூரியில் “துளிர்தமிழ் மன்றம்” தமிழ்த்துறையின் வாயிலாக கொண்டு செயல்படுகிறது. இம்மன்றத்தின் முதன்மை நோக்கமே தமிழில் பல்திறனை வெளிப்படுத்துவதே ஆகும்.
அந்த வகையில் கடந்த மூன்றாண்டுகளில் நம் கல்லூரி மாணவா்கள் பல அரசு மற்றும் பிற கல்லூரி சார்ந்தப் போட்டிகளான கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசினையும், வெற்றிக்கோப்பையோடும் வாகைச்சூடிக்கொண்டு வருவார்கள். அவற்றில் ஒருசிறு குறிப்பாக மாநில அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் செல்வி.ரித்திகா (வேதியியல் துறை, இரண்டாம் ஆண்டு), மாவட்ட அளவில் செல்வி. பிரியதர்ஷினி (வணிக நிர்வாக இளங்கலைத்துறை) மாணவிகள் முதல் பரிசினைப் பெற்றுள்ளனர். இதனைப் போன்று பல எண்ணற்ற பரிசினையும் மாணவா்கள் பெற்று நம் கல்லூரிக்கு பெருமைச் சோ்த்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல கருத்தரங்கள், சொற்பொழிவுகள், மன்ற விழாக்கள், கல்லூரிப்பொது விழாக்கள், போட்டிகள், அறிவுசார் மன்ற நிகழ்வுகள் என பல நிகழ்வுகளை முதன்மையாகக் கொண்டு நடத்துகிற பெருமைக்குரியது இத்துளிர் தமிழ் மன்றம்.